மஹர சிறைக் கலவரம் தொடர்பில் எதிர்க்கட்சி விடுத்துள்ள கோரிக்கை!
மஹர சிறைச்சாலை கலவரம் குறித்து சுயாதீன விசாரணை அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
விசாரணைகள் உண்மையை கண்டறிவதற்காக பக்கச் சார்பற்றவையாக காணப்படவேண்டும். சிறைச்சாலை கலவரத்துடன் தொடர்புபட்ட ஒருவர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றால் அது எவ்வாறு சுயாதீனமாக காணப்படும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் மஹர சிறைக்குள் பரவியதை தொடர்ந்து அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் பிசிஆர் சோதனையை அவசியம் என வேண்டுகோள் விடுத்த பின்னரே இந்த வன்முறைகள் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.