ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்
கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் தெரிவித்தார்.
35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதன் பின்னர், இன்றைய தினம் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இச்சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இதன்போது பொலிஸ் சேவையினை முன்னெடுத்து செல்லவும், தேசிய மட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதாக பொலிஸ்மா அதிபர் பிரதமரிடம் வாக்குறுதி வழங்கினார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சேவை குறித்தும் பிரதமர் பொலிஸ்மா அதிபரிடம் கலந்துரையாடினார்.