முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சின் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு

முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சின் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு

முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹித்த உடுமாவல தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, சர்ஜிக்கல் முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் முகக் கவசங்களை இறக்குமதி செய்வதை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், உள்நாட்டு ஔடத உற்பத்தியை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.