ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

ஓம் ராவத் இயக்கத்தில் உருவாக உள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது. 

 

பிரபாஸ், கீர்த்தி சனோன்

 

சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்க உள்ளார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் ராவணனாக நடிக்க உள்ளார். ராமாயண கதைப்படி சீதாவின் கதாபாத்திரமும் முக்கியமானது தான். ஆதலால் இப்படத்தில் சீதையாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சமீபத்திய தகவலின்படி பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.