
யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட வைத்தியசாலைகள் - வியாபார நிறுவனங்களை மீளத் திறக்க அனுமதி
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி, மருத்துவர் பாலமுரளி தெரிவித்தார்.
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தவிர்ந்த வேறு பணியாளர்களை கடமைக்கு அமர்த்தி மீளத்திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.