இன்றைய ராசி பலன்கள் 30/11/2020

இன்றைய ராசி பலன்கள் 30/11/2020

மேஷம்

மேஷம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சுட்சமங்களை சொல்லி தருவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


மிதுனம்

மிதுனம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


கடகம்

கடகம்: வீரியத்தை விட காரியம் பெரிது என்பதை உணர்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.


சிம்மம்

சிம்மம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்து காட்டுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


கன்னி

கன்னி:  உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராற்றில் போய் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


தனுசு

தனுசு:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.அமோகமான நாள்.


மகரம்

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். புதுமை படைக்கும் நாள்.


கும்பம்

கும்பம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உயர்வு பெறும் நாள்.


மீனம்

மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.