
கைது செய்த மாணவனை விடுவிக்க துணைவேந்தர் தீவிர முயற்சி
திருக்கார்திகைக்காக யாழ். பல்கலைக்கழக வாயிலில் தீபமேற்றிய சமயத்தில் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட மாணவன் எம்.தர்ஷிகனை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஈடுபட்டுள்ளார்.
மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்ட துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, மாணவனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்.
எனினும், பொலிஸ் சம்பிரதாயங்களை முடித்த பின்னர் மாணவனை விடுதலை செய்வதற்குக் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இணங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.