தாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு

ஈஸ்வரன்’, ‘மாநாடு’ என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்புவுக்கு அவரது தாயார் அன்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. ஓய்வின்றி அடுத்தடுத்த படங்களில் சிம்பு தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில், அவரது தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்துள்ளார். 

 

சிம்புவின் தாயார் உஷா

 

நீண்ட நாளாக நடிகர் சிம்பு விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்துள்ளார். தனது தாயின் பாசமிகு பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிம்பு தற்போது தனது புதிய காரில் உலா வருகிறார்.