வயோதிபர்களை தாக்கிய மர்மக் குழு! சங்கானையில் சம்பவம்

வயோதிபர்களை தாக்கிய மர்மக் குழு! சங்கானையில் சம்பவம்

வெளிநாட்டிலுள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர்கள் இருவரை இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் சங்கானை தேவாலய வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது.

சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (64 வயது ), தங்கராஜா புவனேஸ்வரி (56 வயது) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

WhatsApp Image 2020 11 28 at 11.54.09

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வெளிநாட்டில் வசிக்கும் சிவாஜிலிங்கம் என்பவரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் மீது தாக்குதல் நடத்திய வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2020 11 28 at 11.54.38

அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் கொள்ளையிட்டமை தொடர்பிலும் தகவல்கள் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.