இன்றைய ராசி பலன்கள் 27/11/2020

இன்றைய ராசி பலன்கள் 27/11/2020

மேஷம்

எதிரிகளாக இருந்தவர்கள் திடீரென்று நண்பர்களாக மாறுவர். வழிபாட்டால் வளர்ச்சி காண்பீர்கள். மன தைரியம் கூடும்.
 உடல்நலம் சீராகும். பயமுறுத்தியவர்கள் விலகுவார்கள்

ரிஷபம்

வரவு திருப்தி தரும் நாள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் சிலரின் அறிமுகத்தால் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். எதிர்கால நலன் கருதிசில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மிதுனம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள். நல்ல தகவல் நண்பர்கள் மூலம் வந்து சேரும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் உண்டு. அரசு வழி அனுகூலம் கிடைக்கும்.

கடகம்

பிரச்சினைகள் தீரும் நாள். பிரபலஸ்தர்களின் பின்னணியில் இயங்கும் வாய்ப்பு உண்டு. தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவருவர். வரவேண்டிய பண வரவு கடைசி நேரத்தில் வந்து சேரும்.

சிம்மம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். நீண்ட நாட்களாக நினைத்த காரியம் நிறைவேறும். உறவினர் ஒருவரின் சந்திப்பால் உதவி கிட்டும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

எதிரிகளின் பலம் கூடும் நாள். கோபத்தைக் குறைத்துக்
கொண்டு செயல்படுவது நல்லது. எடுத்த காரியத்தை முடிக்க பெரும் பிரயாசை எடுக்கநேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

துலாம்

தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிதரும். கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும்.

விருச்சகம்

வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள். வியாபார விருத்திஉண்டு. வசதி, வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். நலங்கள் வந்து சேர நந்தி வழிபாடு கைகொடுக்கும்.

தனுசு

குடும்ப ஒற்றுமை கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முன்வருவீர்கள். கட்டிடப் பணி தொடரும். உத்தியோக மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

மகரம்

வருமானம் இருமடங்காகும் நாள். உற்றார் உறவினர்களின்
பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். தொழில் வளர்ச்சி கூடும்.

கும்பம்

புதிதாக சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். குழந்தைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
பயணங்கள் பலன் தருவதாக அமையும். நிதி நிலை உயரும்.

மீனம்

குடும்பச்சுமை கூடும் நாள். திட்டமிட்ட பயணங்களில் திடீர்
மாற்றங்களைக் செய்ய நேரிடலாம். தொழில் முன்னேற்றத்திற்காக செல்வந்தர்களைச் சந்திப்பீர்கள். வாகன மாற்றம் நன்மை தரும்.