இந்தியாவில் வளைய சூரிய கிரகணம் ஆரம்பம்
வானில் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் இன்று காலை 10:22 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த கிரகணம் பிற்பகல் 3:04 மணி வரை நீடிக்கும் என்பதுடன், முழு சந்திர கிரகணம் பிற்பகல் 12: 10 மணிக்கு நிகழும் என தெரிவிக்கப்படுகிறது.
பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும் நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும்.
அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படும். ஜூன் 21ல் நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால் சூரியன் வளையம் போன்று தோன்றுகிறது. இது ‘வளைய சூரிய கிரகணம்’ என அழைக்கப்படுகிறது
இந்த வளைய சூரிய கிரகணம் இன்று (ஞயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமாகியது.
மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும் என்றும் ஏனைய பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் 34 சதவீதம் தெரியும் என்றும் கூறப்பட்ட நிலையில், சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சூரிய கிரகணம் தென்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.