சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாரான சுவாதி

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை சுவாதி, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது. 

 

தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். 2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். 

 

சுவாதி

 

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். தற்போது ஐதராபாத்துக்கு திரும்பி பெற்றோருடன் வசிக்கிறார். சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வந்துள்ளன.