யாழில் முக்கிய அரச திணைக்களம் இரு நாட்களுக்கு பூட்டு

யாழில் முக்கிய அரச திணைக்களம் இரு நாட்களுக்கு பூட்டு

யாழ். மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கான சேவை இடம்பெற மாட்டாது என பதிவாளர் நாயகம் க. நடராஜா அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகமானது, நேற்றிரவு பெய்த கடும் மழையின் தாக்கத்தினால் அலுவலகம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

வெள்ள நீரை அகற்றும் செயற்பாட்டில் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பொது மக்களுக்கான சேவை எதுவும் இடம்பெற மாட்டாது என அறிவித்துள்ளார்.

20201126 092626

இருப்பினும் அத்தியாவசியமான சேவைகளை மாத்திரம் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

20201126 092619 mfnr