சோவியத் யூனியன் போர் தொடுத்தால் கூட்டாக எதிர்கொள்ள ஜெர்மனி- ஜப்பான் ஒப்பந்தம் செய்த நாள்: 25-11-1936

ஜெர்மனியும், ஜப்பானும் சோவியத் யூனியன் நாடுகள் தங்கள் மீது போர்தொடுத்தால் கூட்டாகச் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஜெர்மனியும், ஜப்பானும் சோவியத் யூனியன் நாடுகள் தங்கள் மீது போர்தொடுத்தால் கூட்டாகச் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தம் 1936-ம் ஆண்டு நவம்பர் 25-ந்தேதி நடைபெற்றது. இந்த ஓப்பந்தமே இரண்டாம் உலக்போரில் ஜெர்மனியும், ஜப்பானும் சேர்ந்து போரிட காரணமாக இருந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-


* 1795- சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான். * 1833 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது. * 1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முழுவதும் சேதமடைந்தது. 30 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர். * 1867 - அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார். * 1905 - டென்மார்க் இளவரசர் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் ஏழாம் ஹாக்கோன் என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானார்.

* 1926 - ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் பலியானார்கள். பலர் காயமுற்றனர். * 1936 - ஜப்பான், ஜெர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன. * 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்போர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜெர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.

* 1950 - ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் ஏற்பட்ட சூறாவளியினால் மேற்கு வெர்ஜீனியாவில் 323 பேர் கொல்லப்பட்டனர். * 1950 - மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது. * 1952 - அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது