நீங்கள் இந்த ராசியா? அப்படியானால் இந்த இந்த இடத்தில் தான் அதிகம் செலவிடுவீர்கள்?
பொதுவாகவே வீட்டில் எவ்வளவு இடம் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடத்தில் தான் அதிக நேரம் செலவு செய்ய விரும்புவோம். அவ்வகையில் ராசியின் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் அதிகமாக நேரம் செலவு செய்ய விரும்புகிறார்கள்?
ஒரு சிலருக்கு அந்த இடத்தில் அதிக நேரம் இருந்தால் தான் ஓய்வாக உணர்வார்கள். இது அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கிறது. அப்படியான இடங்கள் என்னென்ன? உங்களுடைய ராசிக்கு நீங்கள் எந்த இடத்தில் அதிக நேரம் இருப்பீர்கள்? என்று தெரியுமா கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அதிகம் செலவழிக்க விரும்பும் இடமாக அவர்கள் தேர்ந்தெடுப்பது தங்களுக்குரிய விருப்பமான செயலை செய்யும் இடமாக இருக்கிறது. அதாவது அவர்கள் தோட்ட கலையை விரும்பினால் அதிகமாக தோட்டத்திலும், உடற்பயிற்சி போன்ற விஷயங்களை செய்பவர்களாக இருந்தால் உடற்பயிற்சி கூடத்திலும் அதிகம் செலவிட விரும்புவார்கள். மேலும் இவர்கள் சமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் சமையலறையும் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் ஆக இருப்பார்கள். இவர்கள் தங்களை சோர்வாகவும் அல்லது களைப்பாகவும் உணரும் நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளியல் செய்வதை விரும்புவார்கள். இதனால் இவர்கள் அதிக நேரம் குளியலறையில் செலவிட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கலகலப்பான குணமுடையவர்கள். எப்போதும் தங்களை சுற்றி மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால் அவர்கள் விருந்தினர்கள் இருக்கும் அறையை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். புத்தகப் பிரியர்களாக இருக்கும் இவர்கள் எப்போதும் புத்தகம் இருக்கும் இடத்தில் அமர்ந்து எதையாவது வாசித்துக் கொண்டே இருப்பார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் இவர்கள் குடும்பத்தின் மீதும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மீதும் அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு சமைப்பதில் அதிக ஆர்வமும், அக்கறையும் இருக்கும். இதனால் சமையலறையில் அதிகமாக இவர்கள் செலவிட விரும்புவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே நேசிப்பவர்களாக இருப்பார்கள். மனதில் பட்டதை தயக்கமின்றி செய்பவர்களாக இருப்பதால் மற்றவர்களை பற்றிய கவலை அவர்களுக்கு இருப்பதில்லை. கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவிடுவதை இவர்கள் விரும்புவார்கள். அதே போல் தங்களுடைய கவலையை, மன அழுத்தத்தை குறைப்பதால் குளியலறையும் இவர்களுக்குப் பிடித்த இடமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தங்களை சுற்றிய இடம் தூய்மையாக இருப்பதில் கவனமாக இருப்பார்கள். எப்போதும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் அதிக நேரம் படுக்கை அறையில் செலவிடுவதை விரும்புகிறார்கள். படுக்கையறையில் இவர்கள் பெரும்பாலும் தங்களுடைய கவலைகளை இறக்கி வைத்து விடுகிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தனிமையை வெறுப்பவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் வீட்டில் பெரும்பாலும் மற்றவர்களுடன் ஒன்றாக இருப்பதையே விரும்புகிறார்கள். குடும்ப நபர்களுடன் அல்லது நண்பர்களுடன் அதிகம் செலவிடுவதை விரும்புகிறார்கள். இதனால் பொதுக்கூடத்தில் இவர்கள் பெருமளவு நேரத்தை செலவு செய்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பதால் வீட்டில் தங்களுடைய தனிப்பட்ட அறையில் அதிக நேரத்தை செலவு செய்கிறார்கள். மன அழுத்தத்தையும், டென்ஷனையும் குறைத்துக் கொள்வதற்கு படுக்கை அறையில் அதிகம் தனியாக தூங்குவதை விரும்புவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திர விரும்பிகளாக இருப்பார்கள். ஓரிடத்தில் முடங்கிக் கிடப்பது இவர்கள் விரும்புவதில்லை. இயற்கையை ரசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டு விளங்குவார்கள். இதனால் பெருமளவு வீட்டிற்கு வெளியில் வராண்டா போன்ற பகுதியில் அதிக நேரம் செலவிடுவதை விரும்புகிறார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடமையே கண்ணியம் கட்டுப்பாடு என நினைப்பவர்கள். எங்கு இருந்தாலும் இவர்களுக்கு தங்களுடைய கடமையில் கவனமாக இருக்கிறார்கள். வேலை என்று வந்துவிட்டால் சுற்றி இருக்கும் யாரும் இவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. வீட்டில் கூட வேலையைப் பற்றிய சிந்தனையை இவர்களுக்கு இருக்கும். ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இயற்கையை நேசிப்பவர்கள். இயற்கை சார்ந்த சூழலில் அதிகம் செலவிடுவதை விரும்புவார்கள். மொட்டை மாடி., தோட்டம், வீட்டின் பின்பகுதி போன்ற இடங்களில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுவதும் இவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பொதுக்கூடத்தில் அனைவரும் இருக்கும் இடத்தில் அதிகமாக நேரம் செலவிடுவதை விரும்புகிறார்கள். உட்கார்ந்து கொண்டிருந்தாலும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பார்கள் இவர்கள். பலர் சுற்றி இருந்தாலும் இவர்களுடைய சிந்தனை வேறெங்கோ இருக்கும்