துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞர்
கிளிநொச்சி- முகமாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்க முயற்சித்த போது இராணுவத்தினருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக இராணுவத்தினர் நேற்று குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் உந்துருளியில் தப்பி செல்வதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கிருந்த இராணுவ உத்தியோகத்தரை தாக்கி அவர் உந்துருளியில் தப்பி செல்வதற்கு முயற்சித்தமையை அடுத்து இராணுவ சிப்பாய் ஒருவர் அவரை தடுப்பதற்கு முயற்சித்தாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து குறித்த நபர் இராணுவ உத்தியோகத்தர் மீது வீழ்ந்துள்ளதோடு அவரது துப்பாக்கியை எடுப்பதற்கு முற்சித்த போது மற்றமொரு இராணுவ உத்தியோகத்தரால் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினரும் இராணுவத்தினரும் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் பளை கெற்பலியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்