65 நாட்களுக்கு பின்னர் எவரும் அடையாளம் காணப்படவில்லை

65 நாட்களுக்கு பின்னர் எவரும் அடையாளம் காணப்படவில்லை

65 நாட்களுக்கு பின்னர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கொரோனா தொற்றுறுதியான எவரும் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் இதுவரையில் ஆயிரத்து 472 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் 467 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் 901 கடற்படையினருக்கு இதுவரையில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 771 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படைய ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் 130 கடற்படையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களில் 691 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களாவர்.

மேலும் 8 வெளிநாட்டவர்களுக்கு நாட்டில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.