புத்தளம் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்ட அரிய வகை உயிரினம்!

புத்தளம் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்ட அரிய வகை உயிரினம்!

 

வெண்ணப்புவ நாத்தாண்டி தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய காரியாலத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சென்று குறித்த சருகுமானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சருகுமானை நிகாவெரட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக வனஜீவராசிகள் புத்தளம் பிராந்திய உதவி அதிகாரி சஞ்சீவ வீரசேகர தெரிவித்துள்ளார்.