தமிழகத்தில் தீவிரப் பரவலை ஆரம்பித்துள்ள கொரோனா: 4 ஆவது நாளாக அதிக பாதிப்பு!
தமிழகத்தில் வேகமாகப் பரவலை ஆரம்பித்துள்ள கொரோனா தொற்றினால் 4 ஆவது நாளாக பாதிப்பு உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.
அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 396 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிநெச்சப்பட்டுள்ளதுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 845ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், தனியா்ர மருத்துவமனையில் 14 பேர் உட்பட ஒரேநாளில் 38 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 704ஆக அதிகரித்துள்ளன.
மேலும், இன்று ஆயிரத்து 630 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் மொத்தமாக இதுவரை 31 ஆயிரத்து 361 பேர் மீண்டுள்ளனர்.
இதேவேளை, ஒரேநாளில், அதிகபட்சமாக 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதுவரை 8 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.