வீட்டுக்குள்ளேயே 40 கிமீ சைக்கிளில் ரைடு செய்த தமிழ் ஹீரோ

வீட்டுக்குள்ளேயே 40 கிமீ சைக்கிளில் ரைடு செய்த தமிழ் ஹீரோ

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் வீட்டின் காம்பவுண்ட்டுக்கு உள்ளேயே 40 கிலோமீட்டர் சைக்கிள் ரைட் செய்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் இருக்கும் நடிகர் அருண்விஜய்க்கு, அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படம் ஒரு பெரும் திருப்பமாக இருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் ஹீரோ மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ’மாஃபியா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நேரத்தில் பொறுப்பாக வீட்டுக்குள்ளேயே இருந்து உடற்பயிற்சி செய்து, அதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது நடிகர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது அவர் வீட்டின் காம்பவுண்ட்டுக்கு உள்ளேயே சைக்கிளில் இரண்டு சுமார் இரண்டரை மணி நேரத்தில் 40 கிலோமீட்டர் ரைடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். நான் பொது சாலையில் சைக்கிள் ஒட்டவில்லை என்றும் தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் சைக்கிள் ஓட்டியதாகவும், அனைவரும் பொறுப்பாக, வீட்டிற்குள் இருந்து பாதுகாப்பாக இருப்போம் என்றும் நடிகர் அருண்விஜய் தனது சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.