பாடசாலை மாணவர்களின் வருகை குறித்து கபில பெரேரா தெரிவித்தது என்ன?

பாடசாலை மாணவர்களின் வருகை குறித்து கபில பெரேரா தெரிவித்தது என்ன?

பாடசாலைகள் இன்று ஆரம்பமான நிலையில் மாணவர் களின் வருகை நூற்றுக்கு 60 முதல் 70 சதவீதம் வரை இருந் தாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகள் இன்று (23.11.2020) காலை ஆரம்பமான நிலையில், மாண வர்களின் வருகை நூற்றுக்கு 60 முதல் 70 சதவீதம் வரை இருந்தாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் வருகை சிறப்பாக இருந்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களின் வருகை அதிக ரிக்கும் என்று தான் நம்புவதாகவும், எந்தவொரு பற்றாக் குறையும் இல்லாமல் மாணவர்களுக்குக் கல்வி வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரி வித்தார்.