சாராயத்திற்குப் பதிலாக சானிட்டைசரை குடித்த போதையாளர்கள்: 7பேர் பலி

சாராயத்திற்குப் பதிலாக சானிட்டைசரை குடித்த போதையாளர்கள்: 7பேர் பலி

விருந்து ஒன்றின் போது, ​​மது பற்றாக்குறையால் மக்கள் கை சுத்திகரிப்பானை (சானிட்டைசர்) குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கை சுத்திகரிப்பு குடித்த 7 பேர் இறந்தனர், 2 பேர் கோமா நிலைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது .

ரஷியாவில் இதுவரை மொத்தம் 20 லட்சத்து 64ஆயிரத்து 748 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன 35ஆயிரத்து 778 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவில் 24ஆயிரத்து 822 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.