கொட்டகலை பகுதியில் இரண்டு வயதுடைய குழந்தைக்கும் கொரோனா

கொட்டகலை பகுதியில் இரண்டு வயதுடைய குழந்தைக்கும் கொரோனா

குருநாகல் மாவட்டத்தின் அனைத்து அஞ்சல் மற்றும் உப அஞ்சல் காரியாலங்களும் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளன.

அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேச அஞ்சல் அதிகாரி காரியாலயம் மற்றும் குருநாகல் பிரதான அஞ்சல் அலுவலகத்தின் பணிக்குழாமினரில் 14 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அஞ்சல் திணைக்களத்தால் செயற்படுத்தப்பட்டிருந்த குருநாகல் மாவட்டத்தின் ஒளடத விநியோகமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நாளை முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட காரியாலய தொடரூந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

எனினும் தனிமைப்படுத்திய பகுதிகளில் உள்ள தொடரூந்து நிலையங்களில் தொடருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தொடருந்துகள் நிறுத்தப்படாத நிலையங்கள் மற்றும் நேர அட்டவணை குறித்த விபரங்களை றறற.ளழழசழலயகெஅநெறள.டம என்ற எமது இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன்,கொட்டகலை பகுதியில் இரண்டு வயதுடைய குழந்தைக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.