யாழில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு நேர்ந்த கதி

யாழில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு நேர்ந்த கதி

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும் எனவும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் கலந்து கொள்ள முடியாது எனவும், சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் அதனை மீறி திருமண நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய திருமண வீட்டாரையும், திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.