கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் வீடியோ

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் வீடியோ

தனுஷ் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று ’மாரி’. இந்த படத்தில் தனுஷ் சிக்ஸ்பேக் வைத்திருக்கும் ஒரு காட்சியில் நடித்து இருப்பார். இந்த காட்சியை பலர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்னை கிண்டலடித்தனர். இருப்பினும் இது உண்மையிலேயே சிக்ஸ் பேக் தான் என்றும், இதற்காக தனுஷ் கடினமாக உடற்பயிற்சி செய்தார் என்றும் தனுஷ் தரப்பில் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது ’மாரி’ படத்தின் சிக்ஸ்பேக் காட்சிக்காக தனுஷ் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உண்மையிலேயே அவர் அபாரமாக கடின உழைப்புடன் இந்த சிக்ஸ்பேக்கை கொண்டு வந்தது இந்த வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால் ‘மாரி’ படத்தில் தனுஷின் சிக்ஸ்பேக் கிராபிக்ஸ் என்று கிண்டலடித்தவர்களுக்கு பதிலடியாக இந்த வீடியோ அமைந்துள்ளதாக தனுஷ் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தனுஷ் சுமார் 20 ஆண்டுகளாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தாலும் அப்போது முதல் இப்போது வரை உடல் எடையை அதிகரிக்காமல் ரெகுலரான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை சீராக வைத்திருக்கும் வெகுசில நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது