தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுமக்கள் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திற்கு வருகைத் தருவதற்கு முன்னதாக தங்களுக்கான தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு குறித்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் பிரதான காரியாலயத்திற்கு 0112 696 917 அல்லது 0112 694 523 என்ற இலக்கத்தின் ஊடாகவும், கண்டி கிளைக் காரியாலயத்திற்கு 0812 223 729 என்ற இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொண்டு காலத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமென குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் info@archives.gov.lk, research@archives.gov.lk மற்றும் kandv@archives.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பொதுமக்கள் தங்களுக்கான கால நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமென தெரவிக்கப்பட்டுள்ளது.