அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தாக்கிய பூனை

அரசு மருத்துவமனையில் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை பூனை தாக்கியதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பிரசவபிரிவில் புதிதாக பிறந்த குழந்தைகள் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளை அங்கு சுற்றித்திரிந்த பூனை தாக்கியுள்ளது. பூனை தாக்கியதில் ஒரு குழந்தையின்

முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய பூனை கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. 

 

 

இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:-

 

இந்த வாரத்தில் மருத்துவமனையில் இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை பூனை ஒன்று தாக்கியுள்ளது. பூனை தாக்கிய பச்சிளம் குழந்தைகள் தற்போது நலமுடன் உள்ளன. பூனையை பிடித்து செல்ல வனத்துறையிடம் தகவல் கொடுத்துள்ளேம்.