யாழ்ப்பாணம் தலைமையகப் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியை கண்டித்த நீதிமன்றம்..!

யாழ்ப்பாணம் தலைமையகப் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியை கண்டித்த நீதிமன்றம்..!

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கியதாக, யாழ்ப்பாணம் தலைமையகப் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி, தலைமைப் காவற்தறைப் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயத்திக்கத்துக்குள் நாளை நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதிக்கு இடையே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுவதை தடுக்க கோரும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவற்துறையினர் நேற்று தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கிலேயே யாழ்ப்பாணம் தலைமையகப் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி, தலைமைப் காவற்துறைப் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, தனது சமர்ப்பணத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு வருடாந்தம் 365 நாள்கள் உள்ளன.

ஏன் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மட்டும் நினைவுகூரவேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பினால் கூறப்பட்டதனால்தான் அந்த வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

அவரது இந்த கருத்துக்கு கடும் ஆட்சேபனை வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், 'சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையை மீறி வடக்கு மாகாண மக்களை இழிவாகப் பேசுவதாக மன்றில் சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து குறித்த காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியை நீதிமன்றம் கண்டித்தது

இந்த மனுக்கள் மீதான கட்டளை எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்கிழமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மல்லாகம் நீதிமன்றில் தெல்லிப்பழை மற்றும் அச்சுவேலி காவற்துறையினர் தாக்கல் செய்திருந்து மாவீரர் நாள் தடுப்பு கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.

அதேநேரம் யுத்தத்தினால் கொல்லப்பட்ட உறவுகளை தடையின்றி நினைவுகூர அனுமதி கோரி யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் ஜனாதிபதி பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.