டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது!

டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து கடுமையாக இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியில் அண்மைக்காலமாக காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டி வருகிறது. டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோல் எரிப்பில் ஈடுபட்டுள்ளதால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காற்றின் தரம் மேலும் மோசமடைவதை தவிர்ப்பதற்காக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் தடையை மீறி பல இடங்களில் பட்டாசு வெடித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனையடுத்து காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி  சிரிஃபோர்ட்டைச் சுற்றியுள்ள காற்றின் தரக் குறியீடு 287 ஆக பதிவாகியுள்ளது.

காற்று மாசுபாட்டால் கண் எரிச்சல் தொண்டை வலி,  மூச்சு விடுவதில் சிரமம் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக டெல்லி மக்கள் முறைப்பாடு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.