முல்லைத்தீவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!

முல்லைத்தீவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் வசிக்கம் குடும்பஸ்தர் ஒருவர் அடி காயங்களுக்கும் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கொலையுடன் தொடர்புடைய குடும்ப பெண் ஒருவர்​ முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த சம்பவத்தின் போது ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஜெயமோகன் நிரோசன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் தலையில் இரண்டு வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் பிரரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது எனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.