பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது ஜனன தினம் இன்று

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது ஜனன தினம் இன்று

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது ஜனன தினமும் இன்றாகும்.

கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேச மக்களுக்காக நிரமாணிக்கப்பட்டுள்ள களனி தெற்கு நீர்வழங்கல் செயற்திட்டத்தின் இரண்டாம் அத்தியாயம், பிரதமர் மஹிந்த ராஜபக்வினால் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது.

1945 ஆம் ஆண்டு மாத்தறை - பாலட்டுவ பிரதேசத்தில் பிறந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது 25 ஆவது வயதில் 1970 ஆம ஆண்டு பெலியத்த தொகுதியில் பொதுத் தேர்தலில் களமிறங்கி, 33 ஆயிரத்து 103 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அன்று முதல் தமது அரசியல் வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், பிரதமராகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஓராண்டு பதவிக் காலம் இன்றுடன் பூர்த்தியாகின்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானார்.

நாட்டின் ஜனாதிபதியாக முதன்முறையாக தெரிவான அரசியல் செயற்பாட்டுடன் நேரடியாக தொடர்பு படாதவரும்இ முன்னாள் இராணுவ அதிகாரியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்hக பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, 52.25 சதவீத வாக்குகளை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்த்தரப்பு பிரதான வேடபாளரைவிடவும் 1.3 மில்லியன் அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி அநுராதபுரத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ருவாண்வெலி சாயவில் ஜனாதிபதி பதவிப்பிரமாணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், இன்றுடன் அவர் பதவியேற்று ஓராண்டு காலம் பூர்த்தியடைந்துள்ளது.

இன்றைய தினம் இரவு 8.30க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.