கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாடு முறைகள்..!

கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாடு முறைகள்..!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் நடமாட்ட கட்டுப்பாடு கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

24 காவற்துறை அதிகார பிரதேசங்களில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ளது

அங்கு நடமாட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளதோடு, பிரதேசவாசிகள் தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு அவர் கோரியுள்ளார்.

கொவிட் 19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உடனடியாக அந்த பகுதிகளை விடுவிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருதானை, கோட்டை, புறக்கோட்டை, வாழைத்தோட்டம் மற்றும் கொம்பனி வீதி ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்களில் உள்ள அரச மற்றும் அரச கண்காணிப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்களை நடத்தி செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும், தனியார் பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் என்பனவும் சேவையில் ஈடுபட முடியும்

நேற்றைய தினம் புறக்கோட்டை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் பொதுமக்கள் தேவையில்லாத நடமாட்டத்தில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது

.பேருந்து அல்லது தொடருந்தில் இருந்து இறங்கும் பயணிகள் அவர்கள் உரிய இடத்திற்கு பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைவாக பேருந்து அல்லது தொடருந்தில் செல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும்.

அவர்கள் அநாவசியமாக அந்த பகுதிகளில் நாடமாட முடியாது என காவற்துறை பேச்சாளர் தெரிவித்தார்.