விபத்தில் சிக்கிய பிரபல நடிகை! தெய்வாதீனமாக தப்பித்தார்

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை! தெய்வாதீனமாக தப்பித்தார்

நடிகை குஷ்பு பயணித்த கார் மேல்மருவத்தூர் அருகே விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடலூரில் நடக்கவிருந்த வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டாங்கர் லொறி ஒன்று மோதியதில் காரின் பக்கவாட்டில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தெய்வாதீனமாக நடிகை குஷ்பு காயமின்றி தப்பித்தார். இந்த விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடவுளின் கருணையால் உயிர் பிழைத்ததாகவும், தனது கணவர் சுந்தர் முருகனின் மேல் வைத்திருந்த நம்பிக்கை உண்மையாகியுள்ளதென அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.