கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்!

கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்!

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரெரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என கல்வியமைச்சரிடம் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் கோரியுள்ளது.

சுகாதார தரப்பினர் விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாத்திரமே அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் செயற்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது பாடசாலைகளை மீள திறப்பது  தொடர்பில் பல்வேறு முரன்பாடான விடயங்கள் முன்வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீளத் திறக்கும் திர்மானம் கூட்டுப்பொறுப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

விரைவில் தொற்றுக்கு இலக்காகும் வாய்ப்புள்ள 4.3 மில்லியன் மாணவர்களையும் பாதுகாக்கும் வகையில் அந்த தீர்மானம் அமைய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார தரப்பினர் இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றுக்கு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.