அரசாங்கத்தின் விஷேட அனுமதியுடன் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள்

அரசாங்கத்தின் விஷேட அனுமதியுடன் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து செல்ல முடியாதிருந்த 80 இலங்கையர்கள் நேற்றைய தினம் அரசாங்கத்தின் விஷேட அனுமதியுடன் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களில் 41 பேரை ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை விசேட விமானம் ஒன்று அபுதாபி நோக்கி பயணமானதாகவும் அதேவேளை, மேலும் 39 பேரைக்கொண்ட விமானம் ஒன்று கட்டார் நோக்கி பயணித்த தாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 92 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 29 பேரும் கட்டாரில் இருந்து 26 பேரும் டோஹாவிலிருந்து 37 பேரும் நேற்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.