இலங்கை மத்திய வங்கியை குற்றம் சாட்டும் ஈ.ரி.ஐ வைப்பாளர்கள் குழு
ஈ.ரி.ஐ நிறுவனம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நிதிச் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஈ.ரி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன குழுவின் தலைவர் அனுஷா ஜயந்தி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஈ.ரி.ஐ நிறுவன விடயத்தில் மத்திய வங்கி முற்றுமுழுதாக நிதிச் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளது. இந்தநிலையில் தங்களை நியாயப்படுத்த மத்திய வங்கியின் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.
மத்திய வங்கியின் அதிகாரிகள் பொறுப்பற்று செயற்பட்டுள்ளமை தெளிவாக புலப்பட்டுள்ளதாக ஈ.ரி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன குழுவின் தலைவர் அனுஷா ஜயந்தி தெரிவித்துள்ளார்.