வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீடு மேலதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீடு மேலதிக பெரும்பான்மையுடன் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அதன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் தலைமையில் இன்று கூடியது.
38 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் மூன்று உறுப்பினர்கள் இன்றைய தினம் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இதனையடுத்து பாதீடு மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சியினரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதற்கமைய ஆதரவாக 32 வாக்குகள் வழங்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஐக்கிய தேசியக்கட்சி என்பன ஆதரவு வாக்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.