COVID -19 வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காகவே ட்ரோன் தொழிநுட்பம்

COVID -19 வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காகவே ட்ரோன் தொழிநுட்பம்

COVID 19 வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காகவே (Drones)ட்ரோன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

மக்களின் நலனை கருத்திற்கொண்டு வைரஸ் இரண்டாவது அலையைத் தொடர்ந்து மக்களை பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்..

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இன்று நடைபெற்ற , அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது. இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல, அதே வேளை தொற்று ஒருவரிடம் இருந்து பொதுமக்களுக்கு பரவுவது தடுக்கப்பட வேண்டும். அதனை மேற்கொள்வது பொறுப்புமிக்க அரசாங்கத்தின் கடமையாகும் என்று அமைச்சர் கூறினார்.

மற்றுமொரு கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் மறைப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்தவித தேவையில்லை, சில தோல்வி கண்ட குழுக்களினாலேயே இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்றிலிருந்து நாட்டை மீட்டெழுப்புவதற்காக சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு உண்டு. இதனை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)