மற்றுமொரு புள்ளி சுறா மீன் கரையொதுங்கியது
உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாரிபாடு கடற்கரையோரத்தில் நேற்று மாலை (16) அரிய வகை புள்ளி சுறா மீன் ஒன்று கரையொதுங்;கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 2 ஆயிரம் கிலோ கிராமுக்கும் அதிகமான நிறையுள்ள குறித்த சுறா 15 அடி நீலம் கொண்டதாக காணப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
குறித்த சுறா மீன் பாரிபாடு கடற்கரையோரப் பகுதியில் கரையொதுங்கியதுடன், அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து செல்வதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு கரையொதுங்கிய குறித்த சுறாவை பார்வையிட பெரும் எண்ணிக்கையிலானோர் கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, கற்பிட்டி மற்றும் முந்தல் பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்களிலும் கடந்த (14) சனிக்கிழமை 16 அடி நீலமுடைய இரண்டு பெரிய புள்ளி சுறா மீன்கள் கரையொதுங்கியதுடன், அவ்விரண்டு மின்களும் மறுநாளே உயிரிழந்துள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.