ஸ்ரீலங்கன் எயார்லயன்ஸ் கம்பனிக்கான தன்னார்வ ஓய்வு முறைமை
2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளில், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லயன்ஸ் கம்பனிக்கான முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வு முறைமை தொடர்பில் எட்டப்பட்டுள்ள தீர்மானம்.
வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லயன்ஸ் கம்;பனி எதிர்கொண்டு நிதி நெருக்கடி காரணமாக தன்னார்வ ஓய்வு முறைமையை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆய்வுக் கற்கையை மேற்கொள்வதற்காக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவால் எதிர்வரும் 03 வருடங்களுக்கு செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வு முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த ஓய்வு முறைமையின் கீழ் ஏறத்தாழ 560 பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்காக, 1.46 மில்லியன் ரூபாய்கள் செலவாவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஓய்வு முறைமையை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.