
இனி பிச்சை போட்டால் உங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு!
போக்குவரத்து சமிக்ஞை இருக்கும் இடத்தில் வாகனங்களில் வருபவர்கள் யாசகர்களுக்கு பிச்சை போட்டாலும் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சமிக்ஞை விளக்குகள் சிவப்பு நிறத்தில் ஒளிரும் போது வாகனங்களுக்கு அருகில் பிச்சைக்காரர்கள் உதவி கேட்டு வருவதுடன்,சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுவார்கள்.
இதன்போது வாகனத்தில் உள்ளவர்கள் பணம் கொடுத்தாலோ, பொருட்களை கொள்வனவு செய்தாலோ அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.