யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

வீதி சமிஞ்சைகளுக்கு அருகில் யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மின் சமிஞ்சைக் கட்டமைப்பில் பச்சை விளக்கு ஒளிரும்  போது யாசகம் வழங்குவோர் மற்றும் சமிஞ்சைக்கட்டமைப்பு அருகில் பொருட் கொள்வனவில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் வீதி சமிஞ்சைக் கட்டமைப்புக்களுக்கு அருகில் யாசகம் கேட்போருக்கு எதிராக வீதிகள் தொடர்பான சட்டத்தின் 50 ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் யாசகத்தில் ஈடுபடும் பல யாசகர்கள் வியாபாரமாக அதனை மேற்கொள்வதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

குறித்த யாசகர்களுக்கு முதலாளிகள் உள்ளதாகவும் யாசகர்கள் சேகரிக்கும் பணத்தை அவர்கள் பிற்பகலில் தமது முதலாளிகளுக்கு அதனை வழங்குவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த நிலையில் வியாபார நோக்கத்தில் யாசகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.