அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்து இருக்கிறது

உலகெங்கிலும் இருந்து அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய திறந்தநிலை அறிக்கை நேற்று வெளியானது. இதன்படி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் கடந்த 2019-2020-ம் ஆண்டில் சுமார் 2 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து இருக்கிறது. ‘தங்கத் தரத்திலான கல்வி அங்கு கிடைப்பதாக மாணவர்கள் கருதுவதே இதற்கு காரணம்’ என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் பொது விவகாரங்கள் துறை ஆலோசகர் டேவிட் கென்னடி கருத்து தெரிவித்துள்ளார்.