
புற்றுநோயால் பாதிப்பு: நகைச்சுவை நடிகருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன்
நகைச்சுவை நடிகர் தவசி உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நடிகர் தவசி
கம்பீரமான மீசையுடன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தவசி. இவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். பா.சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.