ரிஷாட் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

ரிஷாட் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் ஊடாக அரிசி இறக்கமதி செய்யப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ரிசாட் பதியுதீன், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகி இருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே, ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.