கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பொதுமக்களுக்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பொதுச்சுகாதர விதிமுறைகளுக்கு அமைவாக பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸார்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

16 நாட்கள் திருவிழாவினை கொண்ட ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழாவில், எதிர்வரும் யூலை முதலாம் ஆம் திகதி வேட்டைத்திருவிழாவும், 02ஆம் திகதி சப்பர திருவிழாவும், 03 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 04 ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.