ஹப்புதளை பகுதியில் பாழடைந்த வீட்டு வளாகத்திலிருந்து வெடிகுண்டுகளின் பாகங்கள் மீட்பு..?

ஹப்புதளை பகுதியில் பாழடைந்த வீட்டு வளாகத்திலிருந்து வெடிகுண்டுகளின் பாகங்கள் மீட்பு..?

ஹபுதளை-போகவத்த பிரதேசத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டு வளாகத்தில் இருந்து வெடிகுண்டுகளின் பாகங்கள் என்ற சந்தேகத்திற்கிடமான பல பாகங்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். ஹப்புதளை காவல்துறையினர் நேற்றிரவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், குறித்த பகுதியில் விசேட தேடுதல் பணியை மேற்கொள்வதற்காக குண்டு அகற்றும் பிரிவு மற்றும் காவல்துறை மோப்ப நாய்களின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஹப்புதளை காவல்துறையினர் தெரிவித்தனர்.