கொரோனா வைரஸ் : தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் : தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 15 பேர் உட்பட மொத்தமாக 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை ஒரே நாளில் அதிகபட்சமாக 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமார் 8 லட்சத்து 28 ஆயிரத்தை நெருங்கி உள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.