3 வானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- நான்கு பேர் மருத்துவமனையில்

3 வானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- நான்கு பேர் மருத்துவமனையில்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலன் பின்னதூவ பகுதியில் 96வது மைல் கல் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மகிழூர்தி ஒன்றின் பின்புரத்தில் கெப் ரக வாகனம் மோதியுள்ளதோடு குறித்த கெப் ரக வாகனத்திற்கு பின்புறத்தில் மற்றுமொரு மகிழூர்தி மோதுண்டு விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மகிழூர்தி மற்றும் கெப் ரக வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் கராபிடி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.