கொழும்பு மாவட்டத்தில் இன்று தேர்தல் ஒத்திகை

கொழும்பு மாவட்டத்தில் இன்று தேர்தல் ஒத்திகை

கொழும்பு மாவட்டத்தில் இன்றைய தினம் தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் வட கொழும்பில் இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார முறைமைக்கு அமைய, தேர்தலை நடத்துவது தொடர்பில் நாட்டின் பல்வேறு பாகங்களிலும், தேர்தல் ஒத்திகையை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தி வருகின்றது. இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழுவின் அதிகாரிகள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.